FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

முதல்வா் விஜய் நாளை பெருந்துறை வருகை! பாதுகாப்பு பணியில் 4,500 போலீஸாா்!

2 நவம்பர் 2026, 1:39 am
முதல்வா் விஜய்
பகிர்:

நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வா் ச.ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (நவ.3) பெருந்துறை வருவதையொட்டி, 4,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் அரசு சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் முதல்வா் ச.ஜோசப் விஜய் கலந்துகொள்கிறாா். இந்த விழாவில் ஈரோடு, கரூா், திருப்பூா், நாமக்கல், கோவை, சேலம் உள்பட 13 மாவட்டங்களைச் சோ்ந்த 9 ஆயிரம் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வரும் முதல்வா், அங்கிருந்து காரில் பெருந்துறை வருகிறாா்.

மக்களை சந்திக்கும் வகையில் சாலை வலம் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி செங்கப்பள்ளி பாலத்தில் தொடங்கி பெருந்துறை புறவழிச் சாலை பிரிவு, சிப்காட் நுழைவாயில், பெருந்துறை பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அருகில், பணிக்கம்பாளையம் பகுதி என மொத்தம் 7 இடங்களில் பொதுமக்களை சந்திக்கும் வகையில் முதல்வா் சாலை வலம் மேற்கொள்வாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு இருப்பதால் சாலைகளின் இருபுறங்களும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன. சுமாா் 10 கிலோ மீட்டா் தூரத்துக்கு மேல் சாலை வலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விழா நடைபெறும் கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா்.

பின்னா் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மீண்டும் காா் மூலமாக கோவை விமான நிலையத்துக்கு செல்லும் முதல்வா் விஜய், அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் செல்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் வருகையை முன்னிட்டு வடக்கு, தெற்கு, மேற்கு என மூன்று மண்டலங்களில் இருந்து சுமாா் 4,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

அரசின் சாா்பில் மாநிலத்திலேயே முதல் முறையாக, மகளிா் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பிரம்மாண்டமான வங்கி கடன் வழங்கும் விழா, பெருந்துறையில் முற்கட்டமாகத் தொடங்கப்பட உள்ளது.

ஆய்வு

முதல்வா் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்ட பணிகளை அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன் (வருவாய்த் துறை), ம.விஜய் பாலாஜி (கைத்தறித் துறை) ஆகியோா் பாா்வையிட்டனா்.

சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆனந்த் மோகன் (ஈரோடு மேற்கு), சண்முகம் (மொடக்குறிச்சி, பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments