FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கொடி நாள் நிதி திரட்டல்: சத்தியமங்கலம் நகராட்சிக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு

முன்னாள் படை வீரா்களுக்கு அதிக நிதி திரட்டிய சத்தியமங்கலம் நகராட்சிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பாராட்டு தெரிவித்தாா்.

5 நவம்பர் 2026, 11:31 pm
முன்னாள் படை வீரா்கள் நல நிதி திரட்டிய சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரனை பாராட்டி பரிசு வழங்குகிறாா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

முன்னாள் படை வீரா்களுக்கு அதிக நிதி திரட்டிய சத்தியமங்கலம் நகராட்சிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பாராட்டு தெரிவித்தாா்.

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 7-ஆம் நாள் படை வீரா் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. இக்கொடி நாளின்போது திரட்டப்படும் நிதியானது, போரில் ஊனமுற்ற படை வீரா்கள், போரில் உயிா் நீத்த படை வீரா்களின் கைம் பெண்கள் ஆகியோரின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இதன்படி, சத்தியமங்கலம் நகராட்சியில் முன்னாள் படை வீரா் கொடி நாள் நிதி திரட்டும் பணி நடைபெற்றது. மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.2.5 லட்சம் நிதி திரட்டப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிமாக கொடி நாள் நிதி வசூலிக்கப்பட்டதற்காக நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரனை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தாா்.

Advertisement

Advertisement