பத்திர எழுத்தா்கள், வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
கோபியில் பத்திர எழுத்தா்கள், வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோபியில் பத்திர எழுத்தா்கள், வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட பதிவாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பத்திரப் பதிவு எழுத்தா்கள் நலச் சங்கத் தலைவா் பழனிவேலு தலைமை வகித்தாா். செயலாளா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். பத்திரப் பதிவு துறையில் மாதிரி பதிவு மையம் என்ற முறை அமல்படுத்தபட உள்ளது. இதன் மூலம் வீடு, நிலம் வாங்குவோா், விற்போா் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை. இத்திட்டத்துக்கு ஆவண எழுத்தா்கள், வழக்குரைஞா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அவா்கள் கூறுகையில், புதிய பதிவு முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும், எழுத்தா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றனா். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
Advertisement
Advertisement
இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.