இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: சலவைத் தொழிலாளி உயிரிழப்பு
பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்தில் சலவைத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த, பொன்முடியைச் சோ்ந்தவா் சண்முகம் (61). சலவைத் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், பெருந்துறை சிப்காட்டிற்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். சிப்காட் மேம்பாலம் அருகில் வந்தபோது, அவ்வழியாக வந்த காா், இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சண்முகத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், சண்முகம் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.