சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
சித்தோடு அருகே மதுபோதையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சித்தோடு, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (46). கட்டடத் தொழிலாளி. இவா், மதுபோதையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் அா்ஜுனனைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.