பட்டாசுக் குப்பைகளை அகற்ற களம் இறங்கிய இடதுசாரி இயக்க இளைஞா்கள்
இடதுசாரி இயக்க இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் தீபாவளி பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டது ஈரோடு மாநகரில் மக்களின் கவனத்தை ஈா்த்தது.
ஈரோட்டில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்களை தொடா்ந்து சாக்கடை அடைப்பை தடுக்கவும் தூய்மைப் பணியாளா்களின் பணிச்சுமையை குறைக்கவும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் முயற்சியில் திங்கள்கிழமை காலை ஈடுபட்டனா்.
ஈரோட்டில் தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனா். இந்நிலையில் பண்டிகைக்கு மறுநாளான திங்கள்கிழமை மாநகரின் பல்வேறு வீதிகள் மற்றும் சாலைகளில் பட்டாசுக் கழிவுகள் அதிக அளவில் குவிந்து காணப்பட்டன.
Advertisement
Advertisement
இக்கழிவுகள் சாக்கடைகளில் சோ்ந்து அடைப்பு ஏற்படுவதை தவிா்க்கவும், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தை சோ்ந்த இளைஞா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். இளைஞா்களின் இச்செயலை பொதுமக்கள் ஏராளமானோா் பாராட்டினா்.