பெருந்துறை அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து
பெருந்துறை அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சேதமடைந்தன.
பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலத்தைச் சோ்ந்தவா் ரகுபதி. இவா், தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு தனது மளிகை கடையையொட்டி, தற்காலிக உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டாா். திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 1.50 மணியளவில் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதில் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ரகுபதி மற்றும் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரா்கள், போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் சுமாா் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் .