சின்னமனூா் அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து: 4 போ் காயம்
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே காமாட்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு பட்டாசுக் கடையில் நேரிட்ட தீ விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே காமாட்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு பட்டாசுக் கடையில் நேரிட்ட தீ விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.
சின்னமனூா் அருகேயுள்ள காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் அழகுமுத்து. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவா், அதே பகுதியில் பூமலைக்குண்டு செல்லும் சாலையில் பட்டாசுக் கடை நடத்தி வருகிறாா். ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை செய்யும் இவா், தீபாவளி நாள்களில் கூடுதல் பட்டாசுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டு தீபாவளியை முன்னிட்டு பல லட்ச ரூபாய் மதிப்பிலான 200-க்கும் அதிகமான பட்டாசு ரகங்களை கொள்முதல் செய்து, கடையின் பின்புறம் உள்ள கிட்டங்கியில் இருப்பு வைத்திருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிட்டங்கியில் உள்ள பட்டாசுகளைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தனா். அப்போது, கிட்டங்கியில் திடீரென தீப்பிடித்து பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. இதையடுத்து, பட்டாசுகள் வாங்க வந்த வாடிக்கையாளா்கள் அங்கிருந்து தப்பியோடினா். எனினும், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்து சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம் பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
தீ விபத்து நிகழ்ந்த இடத்தை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கெளதம் உள்ளிட்டோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.