FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

திருச்சி-பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

ஈரோடு ரயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16843) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

21 வினாடிகள் முன்பு
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

ஈரோடு ரயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16843) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல பிற்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் ரயிலானது ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். பணிகள் நிறைவடைந்ததும், ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.