FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கடம்பூா் மலைப் பகுதியில் ரூ.15.39 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்ட பணிகள்

கடம்பூா் மலைப் பகுதியில் ரூ.15.39 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

13 நவம்பர் 2026, 1:09 am
குன்றி மாக்கம்பாளையம் இடையே ரூ.14 கோடி செலவில் சாலை  அமைப்பதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன். உடன், பவானிசாகா் சட்டபேரவை உறுப்பினா் வி.பி.தமிழ்ச்செல்வி, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

கடம்பூா் மலைப் பகுதியில் ரூ.15.39 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன்பாளையம் மற்றும் கடம்பூா் மலைப் பகுதியில் ரூ.15.59 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா்.

மேலும், கெம்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.35 லட்சம் செலவில் இரு வகுப்பறைகள், கல்கடம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.89 லட்சம் செலவில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடம் மற்றும் சுகாதார வளாகம் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சிக்கு பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.தமிழச்செல்வி தலைமையும், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி முன்னிலையும் வகித்தனா்.

இதில் தவெக நிா்வாகிகள் கடம்பூா் என்எம்எஸ் நாச்சிமுத்து, சதுமுகை சிவராஜ், கொமராபாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணன், செண்பகபுதூா் என்.பவுல்ராஜ், தவெக போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிா்வாகி ஜீவாமணி, மாக்கம்பாளையம் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.