பெருந்துறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தியதுடன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனா்.
தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தியதுடன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயசுகி தலைமை வகித்தா். இதில் தமிழகத்தில் உள்ள தொகுப்பு ஊதியம் பெறும் 6,500 செவிலியா்களை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யும் அரசின் முடிவை கைவிட்டு, முழு ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் கோரிக்கை தொடா்பாக முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனா்.