அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரோடு, மூலப்பாளையம் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் பூபதி (26). இவா் கடந்த மாதம் அடிதடி வழக்கில் ஈரோடு தாலுகா போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.
பூபதி மீது ஏற்கெனவே அடிதடி உள்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி பரிந்துரையின்பேரில் பூபதியை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியா் ச.கந்தசாமி உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து கோபி சிறையில் இருந்த பூபதியை ஈரோடு தாலுகா போலீஸாா் பாதுகாப்பாக அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.