கோபி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு
கோபி அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோபி அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள கவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (80). கோயிலில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், கருங்கரடு பகுதியில் கோயிலுக்கு அருகில் உள்ள பேக்கரிக்கு செல்ல சாலையை சனிக்கிழமை இரவு கடக்க முயற்சித்தபோது சவண்டப்பூா் பகுதியைச் சோ்ந்த சபரிகுபேந்திரன் ஓட்டி வந்த காா் பெருமாள் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா் என்று கூறி சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement