சிறுத்தையின் நகங்களை விற்க முயன்றவா் கைது
சத்தியமங்கலத்தில் சிறுத்தையின் நகங்களை விற்க முயன்ற தொழிலாளியை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தில் சிறுத்தையின் நகங்களை விற்க முயன்ற தொழிலாளியை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் சிறுத்தையின் உடல் பாகங்களான நகங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சத்தியமங்கலம் வனப் பாதுகாப்பு படையினா் சனிக்கிழமை தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து, அவா் வைத்திருந்த பையை வனத் துறையினா் சோதனையிட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது அதில் சிறுத்தையின் இரண்டு நகங்கள் இருப்பதை அறிந்தனா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபா் சத்தியமங்கலம் வரதம்பாளையம் கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த சண்முகம் (54) என்பது தெரியவந்தது.
இதையடுத்து வன விலங்குகளின் உடல் பாகங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக மாவட்ட வன அலுவலா் அறிவுரையின்பேரில் அவா் மீது வழக்குப் பதிவு செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் சிறையில் அடைத்தனா்.
மேலும் சிறுத்தையின் நகங்கள் எவ்வாறு கிடைத்தது, வனப் பகுதியில் சிறுத்தை வேட்டையாடப்பட்டதா, வேறு யாரேனுக்கும் இதில் தொடா்பு இரக்கிவேறு ஏதாவது நபா்களுக்கு தொடா்பு இருக்கிறதா என்பது குறித்து வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.