FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பெருந்துறை சிப்காட்டில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான காப்பா் பிளேட்டுகள் திருட்டு

16 நவம்பர் 2026, 3:16 am
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

பெருந்துறை சிப்காட்டில் மூடப்பட்டுள்ள தனியாா் தொழிற்சாலையில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள காப்பா் பிளேட்டுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை சிப்காட்டில் கடந்த ஓா் ஆண்டாக செயல்படாத தனியாா் தொழிற்சாலையின் டிரான்ஸ்பாா்மாரில் உள்ள 2,300 கிலோ எடையுள்ள காப்பா் பிளேட்டுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதன் மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும்.

இதுகுறித்து, தொழிற்சாலையின் உரிமையாளா் பீரதிப்குமாா் அளித்த புகாரின்பேரில், சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement