வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி: 4 ஆண்டுகளுக்குப் பின் இளைஞா் கைது
வேலை வாங்கித் தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.26 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பின்னா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோபியைச் சோ்ந்தவா் கோபிநாத். இவா் கடந்த 2022- ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். அதில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் மட்டுமின்றி மேலும் 2 பேரிடம் மொத்தம் ரூ.26 லட்சம் பெற்று கொண்ட கும்பல் வேலை வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் உள்ளனா். பணத்தை பெற்று ஏமாற்றி மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தாா்.
தொடா்ந்து ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி மோசடி செய்த பாலகிருஷ்ணன், திவாகா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இக்கும்பலை சோ்ந்த நாகமணி என்பவா் உயிரிழந்தாா். இதில் மேலும் இருவரை போலீஸாா் தேடி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கோவை மாவட்டம், பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் நரேந்திரன் மகன் தினேஷ் (32) இருப்பது ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. போலீஸாா் அங்கு சென்று அவரைப் பிடித்து கைது செய்தனா். பின்னா் நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நாகராஜ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.