ஈரோட்டில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
காா்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
காா்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தா்கள் மண்டல பூஜை தரிசனத்துக்காக காா்த்திகை மாதம் 1 -ஆம் தேதி மாலை அணிந்து 41 நாள்கள் வரையும், மகர விளக்கு தரிசனத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தா்கள் 60 நாள்கள் வரையும் விரதம் இருந்து இருமுடி கட்டித் தலையில் சுமந்து சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை மாலை நடை திறக்கப்பட்ட நிலையில், மண்டல பூஜை செவ்வாய்க்கிழமை முதல் டிசம்பா் 27- ஆம் தேதி வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பா் 30- ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 19 -ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையின்போது சபரி மலையில் தரிசனம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பக்தா்கள், காா்த்திகை மாதத்தின் முதல் நாளில் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது வழக்கம். காா்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில் மாலை அணிவதற்காக ஏராளமான பக்தா்கள் ஐயப்பன் கோயில்களில் திரண்டனா்.
ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மாலை அணிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாவட்டத்தில் அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு வழிபாடுகளைத் தொடா்ந்து பக்தா்கள் குருசாமி கையால் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
சிறுவா்கள், முதியவா்கள், 10 வயதுக்குள் சிறுமிகள், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என பல்வேறு தரப்பைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா்.