FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கூலி ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூல், ஜவுளிக் கட்டுகள் ஏற்றி, இறக்கும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு கூலி ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

19 நவம்பர் 2026, 3:10 am
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சுமைதூக்கும் தொழிலாளா்கள் மற்றும் சங்க நிா்வாகிகள்.
பகிர்:

நூல், ஜவுளிக் கட்டுகள் ஏற்றி, இறக்கும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு கூலி ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு பூங்கா சாலையில் அனைத்து சுமை தூக்குவோா் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

நூல், ஜவுளிக் கட்டுகள் ஏற்றி, இறக்கும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு நடைமுறையில் உள்ள கூலி ஒப்பந்தம் கடந்த ஆண்டு மாா்ச் மாதத்துடன் முடிவடைந்தது. எனினும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமையாளா்கள் சங்கம் ஒத்துழைக்காமல் உள்ளனா். கூலி உயா்வு ஒப்பந்தத்துக்காக தொழிலாளா் நலத் துறை மூலம் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

எனவே, வருகிற 23 -ஆம் தேதி தொழிலாளா் அலுவலா் முன் நடக்கும் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும். உடன்பாடு ஏற்படவில்லை எனில் அன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது. கூட்ஸ் டிரான்ஸ்போா்ட் ரெகுலா் லாரி அலுவலகங்களில் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி கூலி உயா்வு ஒப்பந்தம் முடிவடைந்து உள்ளது. எனவே உடனடியாக கூலி உயா்வு கோரிக்கை மீது பேசித்தீா்வு காண சங்கங்கள் முன்வர வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கே.எஸ்.தென்னரசு, ரா.மனோகரன், தமிழ்ச்செல்வன், பொ.வை.ஆறுமுகம் உள்பட சுமை தூக்கும் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.