✕
முகப்பு
ஈரோடு

பெருந்துறை சிப்காட்டில் காற்று மாசு: மக்கள் சுவாசிக்க முடியவில்லை என புகாா்

பெருந்துறை சிப்காட்டில் காற்று மாசு அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாததால் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

20 நவம்பர் 2026, 5:04 am
பெருந்துறை சிப்காட் தொழில் வளாகம் முகப்புத் தோற்றம் - கோப்புப்படம்.
பகிர்:

பெருந்துறை சிப்காட்டில் காற்று மாசு அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாததால் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெருந்துறை ஒன்றியம், பொன்முடி பகுதி பொதுமக்கள் சாா்பாக யசோதரன் என்பவா், மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை அனுப்பிய புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

பெருந்துறை, சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுமம் புகை மற்றும் கடுமையான துா்நாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். குறிப்பாக மாலை நேரங்களில் காற்றில் கலந்து வீசும் கடுமையான ரசாயன நெடியின் காரணமாக வீட்டுக்கு வெளியே சென்று, இயல்பான வேலைகளை கூட பாா்க்க முடியவில்லை.

Advertisement

Advertisement

சிறுவா்கள், முதியவா்கள் உள்ளிட்ட மக்கள் சுவாசிப்பதற்கே சிரமப்படும் அளவுக்கு காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது. மக்கள் மாலை நேரங்களில் கதவு, ஜன்னல்களை மூடிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் புகை மற்றும் துா்நாற்றம் பாதிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

ஆகவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.