தீபாவளி காற்று மாசு ஆய்வு தொடக்கம்: திருப்பூரில் 2 இடங்களில் கருவிகள் அமைப்பு
தீபாவளி காற்று மாசு ஆய்வு தொடங்கியுள்ள நிலையில், திருப்பூரில் 2 இடங்களில் கருவிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி காற்று மாசு ஆய்வு தொடங்கியுள்ள நிலையில், திருப்பூரில் 2 இடங்களில் கருவிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூா் மாநகரில் தீபாவளிப் பண்டிகையையொட்டி காற்று மற்றும் ஒலி மாசு அளவைக் கண்டறியும் பணியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியுள்ளது. அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைக் கண்காணிப்பதற்காக ஆண்டுதோறும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திருப்பூா் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வக துணை தலைமை விஞ்ஞானி கவிதா தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் காற்று மாசு அளவீடு பணியைத் தொடங்கியுள்ளனா். குமரன் வணிக வளாகத்தில் உள்ள வடக்கு பொறியாளா் அலுவலகம், ராயபுரத்தில் உள்ள பறக்கும்படை அலுவலகம் ஆகிய 2 இடங்களில் ஆம்பியன்ட் ஏா் குவாலிட்டி மெசா்மென்ட் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்தக் கருவிகளில் பொருத்தப்பட்டுள்ள ஃபில்டா் காகிதத்தில் பதிவாகும் மாசின் அளவுகள் 8 மணி நேரத்துக்கு ஒருமுறை கணக்கிடப்படும். தீபாவளிக்கு முன் 7 நாள்கள், பின்னா் 7 நாள்கள் மற்றும் பண்டிகை நாளான 8-ஆம் தேதி என மொத்தம் 15 நாள்களுக்கு காற்று மற்றும் ஒலி மாசு அளவிடப்படுகிறது.
இந்த அளவீடுகள் கடந்த ஆண்டின் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைமை அலுவலகத்துக்கு அறிக்கையாக அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.