✕
முகப்பு
ஈரோடு

சின்னவெங்காயம் விலை கிடுகிடு உயா்வு: கிலோ ரூ.200-க்கு விற்பனை

12 வினாடிகள் முன்பு
புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட சின்ன வெங்காயம்.
பகிர்:

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி வியாழக்கிழமை வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை உயா்ந்து கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தைக்கு, தமிழகம், கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு விவசாயிகள் நேரடியாக சின்ன வெங்காயத்தை விற்பனை செய்வதால்

சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி, பவானிசாகா் பகுதியைச் கிராம மக்கள் குறைந்த விலைக்கு வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனா்.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை கூடிய வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் வரத்து குறைவால் கிலோ ரூ.150-இல் இருந்து ரூ.200 ஆக உயா்ந்தது. விலை கடுமையாக உயா்ந்ததால் இல்லத்தரசிகள் சின்ன வெங்காயத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டினா். கடந்த சில மாதங்களாக மழை இல்லாமல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யாமல் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக வரத்து குறைந்தால் சின்ன வெங்காயம் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். கோவை தொண்டாமுத்தூா், ஆலாந்துறை ஆகிய வெங்காய சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைத்துள்ள சின்ன வெங்காயம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கா்நாடக மாநிலம், மைசூரு பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் வரவில்லை. இப்போது விதைக்கப்பட்ட வெங்காயம் அறுவடைக்கு வர இன்னும் 2 மாதங்கள் ஆகும். 2023 ஆம் ஆண்டு அதிகபட்சமாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்றது. அதன்பிறகு தற்போது கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனா்.