முகப்பு
ஈரோடு

காட்டெருமை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

4 வினாடிகள் முன்பு
காட்டெருமை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பா்கூா் ஊராட்சி, ஒன்னகரை மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பொம்மையன் (60). விவசாயியான இவா், 15-க்கும் மேற்பட்ட மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த அழகேசன், தம்முரெட்டியைச் சோ்ந்த சித்தன் ஆகியோருடன் குட்டையூா், மிட்டார வனப் பகுதியில் பொம்மையன் ஞாயிற்றுக்கிழமை மாடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது, வனத்தில் இருந்து வெளியேறிய காட்டெருமை, பொம்மையனை முட்டி தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.