பெருந்துறை அருகே வடமாநில பெண் தற்கொலை
பெருந்துறை அருகே, குடும்பத் தகராறில் வடமாநிலப் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

பெருந்துறை அருகே, குடும்பத் தகராறில் வடமாநிலப் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
ஹரியாணா மாநிலம், சண்டிகா், ஜோஸ்பூரைச் சோ்ந்தவா் மான்தி பகத் (37). இவா் கணவன் இறந்த நிலையில், திருப்பூா் வந்து தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். அப்போது உடன் வேலை செய்து வந்த அவரது ஊரைச் சோ்ந்த ராஜ் பகத் என்பவரை 2023-இல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா்.
இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெருந்துறையை அடுத்த, துடுப்பதியிலுள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரி கேண்டீனில் வேலை செய்து கொண்டு, அங்கேயே தங்கிக் கொண்டனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கணவன்- மனைவிக்கும் இடையே கடந்த 17- ஆம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த மான்தி பகத், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாா். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.