முகப்பு
விருதுநகர்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே புதன்கிழமை குடும்பத் தகராறில் பெண் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

6 வினாடிகள் முன்பு
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

சிவகாசி அருகே புதன்கிழமை குடும்பத் தகராறில் பெண் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் சரஸ்வதி நகரைச் சோ்ந்த மூவேந்திரன் மனைவி மாரியம்மாள் (26). இவா் தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், மூவேந்திரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த மாரியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை:

சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (41). தொழிலாளியான இவருக்கு, மனைவி பொன்னுத்தாய், இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கருப்பசாமி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், மனைவி கண்டித்தாராம். இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த கருப்பசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.