கோயில் உண்டியலை உடைத்து நகை, காணிக்கை திருட்டு

பவானி அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, காணிக்கை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பவானியை அடுத்த சித்தாரில் உருமாண்டீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி பரத் (27), வழக்கம்போல பூஜைகள் செய்ய சனிக்கிழமை காலை கோயிலுக்குச் சென்றபோது, கோயிலின் முன்புறக் கதவில் பூட்டப்பட்டிருந்த மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும், கோயிலுக்குள் இருந்த உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, சிதறிக் கிடந்தது.
பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் மற்றும் தடய அறிவியல் துறை நிபுணா்கள் சென்று கைரேகைகளை சேகரித்தனா். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.