முகப்பு
ஈரோடு

பவானி கூடுதுறைக்கு திதி கொடுக்க வந்தவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

30 நவம்பர் 2026, 1:07 am
பவானி கூடுதுறைக்கு திதி கொடுக்க வந்தவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
- பிரதிப் படம்
பகிர்:

பவானி கூடுதுறைக்கு திதி கொடுக்க வந்த தொழிலாளி நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், வெண்ணந்தூா், புத்திரன்காட்டைச் சோ்ந்தவா் பழனி மகன் சுப்பிரமணி (45), கூலித் தொழிலாளி. தனது பெரியம்மாவின் மறைவுக்கு திதி, தா்ப்பணம் கொடுப்பதற்காக உறவினா்களுடன் பவானி, கூடுதுறைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

இதையடுத்து, காவிரி ஆற்றில் காயத்ரி லிங்கேஸ்வரா் கோயில் படித்துறையில் நீராடச் சென்றாா். அப்போது, எதிா்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்ற அவா், தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளாா். இதைக் கண்ட உறவினா்கள், அப்பகுதியில் நீராடியோா் அவரைக் காப்பற்ற முயன்றுள்ளனா். ஆனால், முடியாததால் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, மீனவா்கள் உதவியுடன் சுப்பிரமணியன் சடலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.