பவானி ஆற்றங்கரையோரம் சாகுபடி செய்த பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் வேதனை
பவானி ஆற்றங்கரையோரம் சாகுபடி செய்த பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
பவானி ஆற்றங்கரையோரம் சாகுபடி செய்த பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள சித்தன்குட்டை, கன்றாமொக்கை, வால்கரடு ஆகிய கிராமங்களில் உள்ளூா் மக்கள் பவானிஆற்றங்கரையோரம் குறுகிய கால பயிா்கள் சாகுபடி செய்து வருகின்றனா்.
கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் அவரை, தட்டைப்பயறு, பூசணி ஆகிய பயிா்கள் சாகுபடி செய்தனா். தற்போது பெய்துவரும் பலத்த மழையால் பவானி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சாகுபடி செய்த நிலங்களில் தண்ணீா் புகுந்தது. இதனால் அவரை, தட்டைப்பயறு, பூசணி உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கின. மேலும் கரையோரம் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மானாவாரி பயிா்களும் மூழ்கி சேதமடைந்தன. பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
பவானிசாகா் அணை நிலவரம்:
பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவ மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 61.60 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து 2,483 கனஅடியாகவும் நீா் வெளியேற்றம் 105 கனஅடியாகவும் நீா் இருப்பு 7.78 டிஎம்சியாகவும் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.