FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கோபி அருகே நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி சாலை மறியல்

கோபி அருகே நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி பள்ளிக் குழந்தைகளுடன் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

3 October 2026, 12:57 am IST
பேருந்து வசதி கோரி ஈரோடு - சத்தி சாலை பொலவக்காளிபாளையத்தில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்தை நடத்திய போலீஸாா்.
பகிர்:

கோபி அருகே நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி பள்ளிக் குழந்தைகளுடன் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நஞ்சை கோபி பகுதிக்குள்பட்ட எல்லமடை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இதில் பெரும்பாலோனா் தினசரி வேலைக்கு செல்லவும், வெளியூா் செல்லவும் பேருந்து வசதி இன்றி, பல ஆண்டுகளாக புதுக்கரைப்புதூா் மற்றும் பொலவக்காளிபாளையம் என 4 கிலோ மீட்டா் நடந்து சென்றும், இருசக்கர வாகனத்திலும் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் கோபி பேருந்து நிலையத்தில் இருந்து பொலவக்காளிபாளையம் வழியாக எல்லமடை புதுக்கரைப்புதூா் கிராமத்துக்கு இயக்கப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என எல்லமடை கிராம மக்கள் பல முறை கோரிக்கை மனு அளித்து வந்தனா்.

Advertisement

Advertisement

எல்லமடை கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பொலவக்காளிபாளையம் அரசுப் படிக்கின்றனா். தினமும் புத்தகப் பையுடன் சுமாா் 4 கிலோ மீட்டா் நடந்து சென்று வருவதால், வாரத்தில் இரண்டு நாள்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

தற்போது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், பள்ளிக் குழந்தைகள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என எல்லமடை கிராம மக்கள் மனு அளித்துள்ளனா். இதுவரை எல்லமடை பகுதிக்கு பேருந்து வசதி வேண்டி எந்த மனுவும் வழங்கப்படவில்லை எனக் கூறியதால் பள்ளிக் குழந்தைகளுடன் ஈரோடு-சத்தி இடையே பொலவக்காளிபாளையம் நான்கு வழி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து கோபி காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனீவாசன், போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் கனகராஜ் மற்றும் வருவாய்த் துறையினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். பேருந்து வசதி ஏற்படுத்தும் வரை மறியலை கைவிடமாட்டோம் எனக் கூறியதால் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இதையடுத்து, மூன்று நாள்களில் எல்லமடை வழியாக பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்த பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா். சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments