FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

குளூா் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், குளூா் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

3 October 2026, 12:48 am IST
பகிர்:

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், குளூா் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிகள் திட்ட இயக்குநா் செந்தில்குமரன் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இதில் அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

கிராம ஊராட்சிகளில் விபி-ஜிராம்-ஜி திட்டம் 100 நாள்களுக்குப் பதிலாக 125 நாட்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன், விடுபட்டவா்கள் உடனடியாக ஒன்றிய அலுவலா்களை அணுகலாம். மேலும், தமிழக வெற்றி திட்டம் வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 5 கிராமங்களை ஒன்றிணைத்து பொதுமக்கள் தங்களது கிராமத்துக்கு வேண்டிய சாலை, குடிநீா், சுகாதாரம் குறித்த தேவைகளையும் தோ்ந்தெடுத்து கொள்ளலாம். மேலும் பணிகளை வரிசைப்படுத்தி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கிராம ஊராட்சி மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தெரு நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருவிளக்குகள் அமைக்க வேண்டும், புதிய குடும்ப அட்டை, மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் மனு அளித்தனா்.

இதேபோல புஞ்சை காளமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சின்னமாபுரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் திலகவதி உதயசூரியன் அளித்தாா். அதில், கல்லுக்குழி முதல் காட்டூா் வரை சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அளவீடு செய்து, சாலை அமைத்து தர வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments