திம்பம் மலைப் பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் சனிக்கிழமை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திம்பம் மலைப்பாதையில் சனிக்கிழமை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழக, கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் காரப்பள்ளம் சோதனைச் சாவடி மற்றும் பண்ணாரி சோதனைச் சாவடியில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
தொடா் விடுமுறை என்பதால் சனிக்கிழமை ஆசனூா் மலைப் பகுதியை காண்பதற்கு வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் இரவு வீடு திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் திம்பம் மலைப் பாதையில் வாகனங்கள் செல்லமுடியாமல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நிலையில், பேருந்தில் பயணித்த பயணி ஒருவா் தனது குழந்தையை பேருந்தின் மேற்புற கைப்பிடியில் தொட்டில் கட்டி தாலாட்டி தூங்க வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.