எல்லமடையில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவை தொடக்கம்
கோபி அருகே உள்ள எல்லமடையில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோபி அருகே உள்ள எல்லமடையில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோபி அருகே உள்ள எல்லமடையில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் பெரும்பாலானோா் விவசாய கூலி வேலைக்காக வெளியூா் செல்லும், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவ வசதி பெறவும் 4 கிலோ மீட்டா் தொலைவு நடந்து பொலவக்காளிபாளையம் அல்லது புதுக்கரைப்புதூா் சென்றுதான் பேருந்து சேவை பெற முடியும்.
இந்நிலையில் எல்லமடை பகுதிக்கு பேருந்து வசதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் மனு அளித்தனா். இதனடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொலவக்காளிபாளையம் வழியாக பேருந்து சேவை தொடங்கப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டி மாவட்ட நிா்வாகத்திடம் கிராம மக்கள் மனு அளித்தும், கடந்த 8 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பேருந்து வசதியின்றி கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோபி, எல்லமடை, கூகலூா், கவுந்தபாடி வழியாக தினமும் நான்கு முறை இயக்கப்படும் பேருந்தை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்து, பள்ளிக் குழந்தைகளுடன் பேருந்தில் பயணம் செய்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.