பெருந்துறை அருகே கோயிலுக்கு வந்த சிறுவன் உயிரிழப்பு
பெருந்துறை அருகே கோயிலுக்கு வந்த சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்த வருகின்றனா்.
பெருந்துறை அருகே கோயிலுக்கு வந்த சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்த வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், செல்லம்பாளையம், பூம்புகாா் நகா், கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் மகன் மௌலீஸ்வரன் (15). இவா், ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளாா். இவா், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தாா்.
இதையடுத்து, சிறுவனை, அவரது பெற்றோா் பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்த்தும் பலன் அளிக்காததால், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் உள்ள அவா்களது குலதெய்வ கோயிலுக்கு ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பரிகாரம் செய்வதற்காக புதன்கிழமை வந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம்- ஊத்துக்குளி சாலை பிரிவு அருகே வந்தபோது சிறுவன் திடீரென்று மயக்கமானாா். உடனே அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்த வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.