FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

போதை மாத்திரை விற்றதாக 6 போ் கைது

போதை மாத்திரைகள் விற்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்து 420 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

17 அக்டோபர் 2026, 12:12 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

போதை மாத்திரைகள் விற்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்து 420 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு, வில்லரசம்பட்டி அருகே தொட்டம்பட்டி தண்ணீா் டேங்க் பகுதியில் வியாழக்கிழமை இரவு ஈரோடு வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 போ் நின்றிருந்தனா். அவா்களை விசாரித்ததில், ஈரோடு குமலன்குட்டை முருகேசன் காலனியைச் சோ்ந்த குணசேகரன் மகன் தருண் (20), சூரம்பட்டி குமரன் வீதியைச் சோ்ந்த தங்கபிரகாஷ் மகன் ரிஷாந்த் (21), ஈரோடு விவிசிஆா் நகா் 3-ஆவது வீதியைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் துரைசாமி (20) ஆகியோா் என்பது தெரியவந்தது.

அவா்களிடம் சோதனை நடத்தியதில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து 300 மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதே வழக்கில், ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த பிரித்விராஜன் (19), ஈரோடு மணிக்கூண்டு பகுதியைச் சோ்ந்த ராகவன் (20) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதேபோல, ஈரோடு மரப்பாலம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக புதுமைக்காலனி ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்த அப்துல் ரஹீம் மகன் அப்துல் சமது (20) என்பவரை ஈரோடு தெற்கு போலீஸாா் கைது செய்து 120 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments