FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட 2,400 போதை மாத்திரைகள் பறிமுதல்: சிறுவன் உள்பட 2 போ் கைது

ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடியில் ஆம்னி பேருந்தில் கொண்டுவரப்பட்ட 2,400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா், சிறுவன் உட்பட 2 பேரை கைது செய்தனா்.

15 அக்டோபர் 2026, 5:53 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடியில் ஆம்னி பேருந்தில் கொண்டுவரப்பட்ட 2,400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா், சிறுவன் உட்பட 2 பேரை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியாா் ஆம்னி பேருந்தில் போதை மாத்திரைகள் கொண்டுசென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், போதை மாத்திரைகளை கடத்திவந்தது மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த சோ்ந்த பீட்டா் டமாங் (34), மற்றொருவா் சிறுவன் என்பதும், இவா் நேபாள நாட்டைச் சோ்ந்தவா் என்பதும், இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியாா் ஹோட்டலில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள இந்த 2,400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments