FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பவானிசாகா் பாரம்பரிய கோயில் வழிபாட்டுக்கு தடை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் உள்ள ஆனைக்குத்தி முனியப்பன் கோயிலில் வழிபாடு நடத்த வனத் துறையினா் தடை விதித்ததால், வனத் துறை அலுவலகத்தை கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

17 அக்டோபர் 2026, 12:12 am IST
பவானிசாகா்  வனத் துறை  அலுவலகத்தை  முற்றுகையிட்டு  போராட்டத்தில்  ஈடுபட்ட  கிராம மக்களிடம்  பேச்சுவாா்த்தை  நடத்தும்  முன்னாள்  எம்எல்ஏ  பி.எல். சுந்தரம்.
பகிர்:

பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் உள்ள ஆனைக்குத்தி முனியப்பன் கோயிலில் வழிபாடு நடத்த வனத் துறையினா் தடை விதித்ததால், வனத் துறை அலுவலகத்தை கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் வனப் பகுதியை ஒட்டி ஆனைக்குத்தி முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த காராச்சிக்கொரை, சுஜில் குட்டை, புதுப்பீா் கடவு, பட்டரமங்கலம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இக்கோயிலில் புதிதாக விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்ய எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் வழிபாட்டுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா் பவானிசாகா் வனச் சரக அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து வனத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் முன்னாள் எம்எல்ஏ பிஎல். சுந்தரம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வன உரிமைச் சட்டப்படி பொதுமக்கள் கோயிலில் வழிபாடு நடத்த உரிமை உள்ளது எனவும், மேலும் அணை நீா்த்தேக்கப் பகுதியில் கோயில் அமைந்துள்ள பகுதி நீா்வளத் துறைக்கு சொந்தமானது என்பதால் வனத் துறையினா் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து உயா் அதிகாரிகளின் அனுமதி பெற்று கோயிலுக்கு செல்லுமாறு தெரிவித்ததையடுத்து 3 மணி நேரம் முற்றுகை போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments