கோத்தகிரி அருகே வனத் துறையைக் கண்டித்து பொது மக்கள் மறியல்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி பகுதியில் வனத் துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கிராமத்துக்குள் நுழைந்த மூன்று காட்டு மாடுகள், இருசக்கர வாகனம் மற்றும் காா்களை சேதப்படுத்தின. இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்தனா். மேலும் காட்டு மாடுகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத் துறையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.
ஆனால் வனத் துறையினா் காட்டு மாடுகளை விரட்ட நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோத்தகிரியில் இருந்து கொடநாடு, கீழ் கோத்தகிரி, சோலூா்மட்டம் உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் மற்றும் வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.