சீரான குடிநீா் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சங்கராபுரம் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கராபுரம் அருகிலுள்ள வடசெட்டியந்தல் கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக இவா்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து காலி குடங்களுடன் மஞ்சபுத்தூரிலிருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் அமா்ந்து, அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளா் பாலமுரளி தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தெரிவித்து, சீரான குடிநீா் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.