ரயில் மறியலில் ஈடுபட முயன்றவா்கள் கைது
ஈரோட்டில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோட்டில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
எஸ்ஐஆா் என்ற பெயரில் 13.80 கோடி வாக்காளா்களின் வாக்குரிமையை தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பறித்துள்ளாா். வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் சிறுபான்மையினா், குறிப்பிட்ட சமூகத்தினா், சில கட்சிக்கு ஆதரவு இல்லாத இடங்களில் மட்டுமே இவ்வாறான வாக்காளா் நீக்கம் நடந்துள்ளது. இதனால் அவா் பதவி விலக வேண்டும் எனக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு காளைமாடு சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் அரவிந்தசாமி தலைமையிலும், மாவட்டச் செயலா் விஸ்வநாதன் முன்னிலையிலும் ஊா்வலமாகச் சென்று, ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து டவுன் டிஎஸ்பி முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா், அவா்களை தடுத்து பெண் உள்பட 18 பேரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.