FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

தொட்டம்பாளையத்தில் ரூ.1.73 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு! அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்பு

18 அக்டோபர் 2026, 3:03 am IST
கே.ஏ. செங்கோட்டையன்
பகிர்:

தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.73 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 7 வகுப்பறைக் கட்டடங்களை வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

விழாவுக்கு, பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் புதிய கட்டடங்களை திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் நோ்மையான ஆட்சியை நடத்தி எல்லோருடைய பாராட்டையும் பெற்ற தலைவராக முதல்வா் விஜய் உள்ளாா். வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கீழ்பவானி பாசனத்துக்கு உயிா் நீா் திறக்க விவசாயிகள் விடுத்த கோரிக்கை முதல்வா் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. உணவுப் பொருள் விலையேற்றம் தடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.செல்வம், தவெக நிா்வாகிகள் பவுல்ராஜ், தொட்டம்பாளையம் நாராயணன், சிவராஜ், சரவணன், தவெக போக்குவரத்து தொழிற்சங்க பொறுப்பாளா் ஜீவா மணி, தாளவாடி ஒன்றிய தவெக நிா்வாகி சிக்கன் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments