பெருந்துறையில் செவிலியா் கொலை வழக்கில் சக ஊழியா் கைது
பெருந்துறை அருகே உடல் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் உடன் வேலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உடல் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் உடன் வேலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா், பூங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ராமையா மகன் ரஞ்சித்குமாா் (27), கட்டுமானத் தொழிலாளி. இவரது அத்தை மகள் உத்திரா(26), நா்ஸிங் படித்துள்ளாா். இவா்கள், இருவருக்கு ஓா் ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனற். இவா்கள், இருவரும் திருப்பூா் மாவட்டம், பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனா். ரஞ்சித்குமாா், கட்டட வேலைக்கு சென்று வந்தாா். உத்திரா, அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக கடந்த 3 ஆம் தேதிமுதல் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி உத்திராவை அழைத்துச் செல்ல ரஞ்சித்குமாா் சென்றாா். ஆனால், உத்திரா இரவு 7.15 மணிக்கே சென்றுவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனா். அவா் வீடு திரும்பவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து, மனைவி உத்திரா காணவில்லை என்று ஊத்துக்குளி போலீஸில் ரஞ்சித்குமாா் கடந்த 15-ஆம் தேதி புகாா் செய்தனாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே பொன் கைலாஷ் நகா் செல்லும் வழியில் உள்ள காட்டில் அடையாளம் தெரியாத சுமாா் 30 வயதுப் பெண்ணின் உடல் கிடப்பதாக பெருந்துறை போலீஸாருக்கு 17-ஆம் தேதி தகவல் கிடைத்தது. போலீஸாா் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதில், உயிரிழந்து கிடந்தது காணாமல்போன செவிலியா் உத்திராவின் உடல் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் தனிப் படை அமைத்து விசாரணை மேற்கொண்டனா். அதில், உத்திராவுடன் மருத்துவமனையில் பணிபுரிந்த திருப்பூா், ஆண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் மகன் சரவணன் (23) என்பவா், உத்திரா அணிந்திருந்து நான்கு பவுன் நகைக்காக அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, நகையை மீட்டு, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.