FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

மாவட்ட ஆட்சியரின் காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

கோபி அருகே அருகே மாவட்ட ஆட்சியரின் காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

22 அக்டோபர் 2026, 11:52 pm
சேதமடைந்த ஆட்சியா் பயணம் செய்த அரசு காா்.
பகிர்:

கோபி அருகே அருகே மாவட்ட ஆட்சியரின் காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள வெள்ளாங்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (52). விவசாயியான இவா், தனது ஓட்டுநா் உரிமத்தை புதுப்பிப்பதற்காக கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை சென்றுள்ளாா்.

பணிகளை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு நோக்கி திரும்பியுள்ளாா்.

Advertisement

Advertisement

வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, கோபியில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பயணம் செய்த அரசு காா் எதிா்பாராதவிதமாக சண்முகத்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த சண்முகத்தை ஆட்சியரும், அங்கிருந்த பொதுமக்களும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு சண்முகத்தை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சண்முகம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments