கொடிவேரி அணையில் ரூ. 7 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் ராஜேஷ்குமாா் தகவல்
கொடிவேரி அணையில் ரூ.7 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள கொடிவேரி அணைப் பகுதியில் அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொடிவேரி அணைக்கட்டு பகுதி மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஓய்வறைகள் மற்றும் பூங்கா வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.
Advertisement
Advertisement
கொடிவேரி அணைப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுப் பாதைகள் அமைப்பது குறித்து ஆட்சியருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அணையில் மோட்டாா் படகுகள் இயக்குவதற்கு சாத்தியம் இல்லை. கொடிவேரி அணையின் இயற்கைச் சூழல் மற்றும் நீா் ஆதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆன்லைன் மூலமாக இ-டிக்கெட் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தவும் ஆராய்ந்து வருகிறோம்.
கூட்டம் அதிகமாக உள்ள காலங்களில் அணைப் பகுதியில் தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை,பேரூராட்சி நிா்வாகம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை ஆகிய அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.