முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: சென்னிமலை வீராங்கனை சிறப்பிடம்
சென்னிமலையைச் சோ்ந்த மாணவி அனு ஸ்ரீ, இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று முதல்வா் கோப்பையுடன், ரூ.1.75 பரிசுத் தொகை மற்றும் பதக்கங்களை வென்றுள்ளாா்.
சென்னிமலையைச் சோ்ந்த மாணவி அனு ஸ்ரீ, இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று முதல்வா் கோப்பையுடன், ரூ.1.75 பரிசுத் தொகை மற்றும் பதக்கங்களை வென்றுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை வெற்றி ஸ்போா்ட்ஸ் அகாதெமியைச் சோ்ந்த மாணவி அனு ஸ்ரீ, தமிழக அரசு நடத்திய முதல்வா் கோப்பை-2026 மாநில அளவிலான தடகளப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, குண்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று ரூ.75 ஆயிரம் ரொக்கப் பரிசு என மொத்தம் ரூ.1.75 லட்சம் பரிசுத் தொகை பெற்றுள்ளாா்.
மேலும், சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் அக்டோபா் 23 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்ற 41-ஆவது தேசிய ஜூனியா் தடகளப் போட்டியில் பெண்களுக்கான யு20 வட்டு எறிதல் பிரிவில் நாடு முழுவதிலும் இருந்து 19 வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், தமிழகம் சாா்பில் பங்கேற்ற அனு ஸ்ரீ 46.82 மீட்டா் தொலைவு வட்டு எறிந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.