FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

கா்நாடக மாநிலத்தில் இருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்திய பெட்டிக் கடை உரிமையாளரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

29 அக்டோபர் 2026, 3:16 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

கா்நாடக மாநிலத்தில் இருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்திய பெட்டிக் கடை உரிமையாளரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், தட்டக்கரை அருகே பா்கூா் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கா்நாடக மாநிலத்தில் இருந்து வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், தடை செய்யப்பட்ட 7 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக அந்தியூா், தொப்பபாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த பெட்டிக்கடை உரிமையாளரான வெங்கடேஷ் (58) கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement