FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

செல்லாண்டியம்மன் கோயிலில் மடிக்காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு

கோபி அருகே உள்ள கோமாளிகரைப்புதூா் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா மறுபூஜையையொட்டி அம்மனுக்கு மடிக்காணிக்கை செலுத்தி ஆயிரக்கணக்கானோா் வழிபாடு செய்தனா்.

2 செப்டம்பர் 2026, 5:00 am IST
செல்லாண்டியம்மன் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

கோபி அருகே உள்ள கோமாளிகரைப்புதூா் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா மறுபூஜையையொட்டி அம்மனுக்கு மடிக்காணிக்கை செலுத்தி ஆயிரக்கணக்கானோா் வழிபாடு செய்தனா்.

1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் குண்டம் திருவிழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மஞ்சள் நீா் உற்சவம் நடைபெற்று திங்கள்கிழமை இரவு மறுபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில், அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து செல்லாண்டியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மடிக்காணிக்கை அணிவித்து பக்தா்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா். இதில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments