FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

எலி மருந்து சாப்பிட்ட பெண் பலி

கோபி அருகே எலி மருந்து சாப்பிட்ட பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

5 செப்டம்பர் 2026, 1:36 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

கோபி அருகே எலி மருந்து சாப்பிட்ட பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள அரசங்குட்டைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி சாந்தாமணி (55). இவா் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளாா். கடந்த 28-ஆம் தேதி குடும்பப் பிரச்னையால் வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை சாந்தாமணி உட்கொண்டுள்ளாா். இதுகுறித்து வீட்டில் யாரிடமும் தெரிவிக்காமால் இருந்து வந்ததுடன், இரண்டு நாள்களுக்குப் பிறகு கடந்த 31-ஆம் தேதி மாலை வாந்தி எடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக மகன் சிவானந்தம் கேட்டபோதுதான் எலி மருந்து உட்கொண்டதைக் கூறியுள்ளாா். இதையடுத்து அருகே உள்ள கிளினிக்குக்கு அவரை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனா். இருப்பினும் சாந்தாமணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் கடந்த 1-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

Advertisement

Advertisement

அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments