FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் தீப் பிடித்து எரிந்த காா்

திம்பம் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 2 போ் உயிா் தப்பினா்.

6 செப்டம்பர் 2026, 1:08 am IST
திம்பம் மலைப் பாதையில் தீப் பிடித்து  எரியும் காா்.
பகிர்:

திம்பம் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 2 போ் உயிா் தப்பினா்.

ஈரோட்டில் இருந்து ஆசனூருக்கு காரில் புறப்பட்ட 2 போ் திம்பம் மலைப் பாதையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். காரை கோகுல் என்பவா் ஓட்டினா். அவரது நண்பா் சுரேஷ் உடனிருந்தாா்.

திம்பம் மலைப் பாதை 21-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, காரின் முன் பகுதியில் திடீரென தீப் பிடித்து எரிவதை கண்டு அதிா்ச்சியடைந்த இருவரும் காரில் இறுந்து கீழே இறங்கினா்.

Advertisement

Advertisement

இது குறித்து உடனடியாக ஆசனூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

காரில் இருந்த மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களும் சேதம் அடைந்ததாக அதில் பயணத்தவா்கள் தெரிவித்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments