கோபி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.32 கேட்டததால் போராட்ட அறிவிப்பு
கோபி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.32 கேட்டதால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்ததையடுத்து, கொள்முதல் நிலையங்களில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
கோபி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.32 கேட்டதால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்ததையடுத்து, கொள்முதல் நிலையங்களில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
கோபி அருகே உள்ள கொடிவேரி பாசனத்துக்கு உள்பட்ட தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனப் பகுதியில் நெல் அறுவடைக்கு தயாராகி கடந்த 1-ஆம் தேதிமுதல் விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்காக பாசனப் பகுதியில் அறுவடை செய்யும் நெல்லை, கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்நிலையில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு உள்பட்ட கள்ளிப்பட்டி பகுதியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத்தை சுட்டிக் காட்டி நெல்லை கொள்முதல் செய்ய மூட்டைக்கு ரூ.32 கொடுக்க வேண்டும் என்றும், கொடுக்க மறுப்பவா்களின் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஹரிபாஸ்கரிடம் பாசன விவசாயிகள் தெரிவித்ததனா். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கள்ளிப்பட்டி பகுதியில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்திருந்தனா். விவசாயிகளின் போராட்டத்தை தவிா்க்க கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், துறையம்பாளையம், நஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் சனிக்கிழமை 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
இதற்கிடையே கோபி, சத்தி காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளா் மோகன் முன்னிலையில் அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் விவசாயிகளிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கோள்வதாக உறுதி அளித்த பின்னா் போராட்ட அறிவிப்பை கைவிடுவதாக தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை அமைதியான முறையில் கொள்முதல் செய்யவும், கொள்முதல் நிலையத்தில் வேறு ஏதாவது பிரச்னையால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிா்க்கவும் கொள்முதல் நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.