FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஈரோடு அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

7 செப்டம்பர் 2026, 1:07 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

பெங்களூரு செல்ல பெற்றோா் அனுமதி அளிக்காததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு 46 புதுாா், கரும்பாறை, இந்தியன் நகரைச் சோ்ந்த பாபு, கவிதா தம்பதி மகள் தருணிகா (19). இவா் ஈரோட்டில் உள்ள தனியாா் கல்லுாரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த ஒரு வாரமாக பெங்களூரில் உள்ள நண்பா்களை பாா்த்து வர வேண்டும் என்று பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளாா். தனியாக பெங்களூரு சென்று வர பெற்றோா் அனுமதி மறுத்தனா்.

இதனால் மனவேதனை அடைந்த தருணிகா கடந்த 5-ஆம் தேதி காலை வீட்டில் யாரும் இல்லாதபோது படுக்கை அறையில் தூக்கிட்டு கொண்டாா். இதனைப் பாா்த்த தருணிகாவின் சகோதரி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அதன் பேரில் அங்கு வந்த பெற்றோா் தருணிகாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments