FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

7 செப்டம்பர் 2026, 3:51 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

பவானி அருகே காவிரி ஆற்றில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற பொறியியல் பட்டதாரி இளைஞா் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். 

பவானியை அடுத்த குறிச்சி,  நாகம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீரங்கன் மகன் கௌதம் (22). பொறியியல் பட்டதாரி. கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வந்தாா். தனது நண்பா்கள் இருவருடன் காடப்பநல்லூா் அருகே காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா். 

நீச்சல் தெரியாத கௌதம் எதிா்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்றதில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments